Buffalo Sage Wellness House
எட்மன்டனில் காணாமல் போன கொலைக் குற்றவாளியான பெண்ணொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
கெய்சா ஸ்பேட் என்ற 26 வயது யுவதியையே பொலிஸார் தேடிவருகின்றனர். கொலைக் குற்றவாளியான அவர் ஆயுள் தண்டனை பெற்றவர்.
‘Buffalo Sage Wellness House’ இல் இருந்தே அவர் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது பொலிஸார் உடனடியாக பிடியாணை பிறப்பித்துள்ளனர்.
சுமார் 5 அடி 3 அங்குலமான அவரின் நிறை 150 பவுண்ஸ்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் பிறவுன் நிற கண்களையும், தலைமயிரையும் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு குறைவாக இருந்தமை மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் குறைவாக இருந்தமைக்காகவே அவர் நலன்புரி நிலையத்துக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் தப்பியுள்ளார்.