அசத்தல் வெற்றியுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா!!!

0
490

(sunrisers hyderabad vs kolkata knight riders)

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய முக்கியமான போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஹைதராபாத் அணி சார்பில் தவான் 50 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பிரசித் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் கடினமான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது.

கொல்கத்தா அணி சார்பில் லின் 55 ஓட்டங்களையும் ரொபின் உத்தப்பா 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

 

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளை பெற்றுக் கொண்ட கொல்கத்தா அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>