பொகவந்தலாவையில் தூக்கில் தொங்கிய யுவதி – கொலையா…? தற்கொலையா…? விசாரணைகள் ஆரம்பம்

0
625
hatton bogavanthalawa girl suicide police crime start

hatton bogavanthalawa girl suicide police crime start
பொகவந்தலாவ பேனோகோட் தோட்ட வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான நிர்மலா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார்.

குறித்த வீட்டில் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் குடும்ப தகராறு இடம் பெற்றுள்ளதாகவும், குறித்த சம்பவம் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணைக்காக ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கபட்டு இது கொலையா அல்லது தற்கொலையா என்பதனை அறிந்து கொள்வதற்காக சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
hatton bogavanthalawa girl suicide police crime start

More Tamil News

Tamil News Group websites :