இளவரசர் ஹாரி – மெகன் திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் புகைப்படத் தொகுப்பாக

0
971
tamilnews Royal wedding 2018 Prince Harry Meghan married Windsor

(tamilnews Royal wedding 2018 Prince Harry Meghan married Windsor)

இங்கிலாந்து விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் ஆகியோரின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திருமண நிகழ்வின் முக்கிய தருணங்கள் புகைப்படங்களாக கிடைத்துள்ளன.

Prince Harry, Meghan markle, royal wedding

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளைய புதல்வன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை முன்னிட்டு கோலாகலமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

Prince Harry, Meghan markle, royal wedding

அரச குடும்ப திருமணத்தை முன்னிட்டு லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

திருமணத்தில் இணையும் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியை கடவுள் ஆசீர்வாதத்துடன் நலமாக வாழ்வதற்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

திருமணத்தில் மணமகள் மேகன் மார்கலின் தந்தை தாமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை நடந்தது.

Prince Harry, Meghan markle, royal wedding

அதனால் ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

Prince Harry, Meghan markle, royal wedding

இவர்கள் தவிர திருமண விழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

மேலும், 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் இங்குள்ள ஒரு திடலில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது

இதுதவிர, எங்கிருந்து மணவிழாவை வசதியாக பார்க்க முடியுமோ, அந்த பகுதியில் உள்ள சாலைகளில் நேற்று முதல் லட்சக்கணக்கான மக்கள் நடைபாதைகளில் இடம்பிடித்து காத்திருந்தனர்.

Prince Harry, Meghan markle, royal wedding

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரே மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோர் முதன்முதலாக அந்த இடத்திற்கு வந்த பிரபலங்களில் முக்கியமானவர்கள்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.25 (இந்திய நேரப்படி பிற்பகல் சுமார் 4 மணி) மணியளவில் அரசகுடும்பத்தார் விண்ட்சோர் நகரில் உள்ள தேவாலயத்திற்கு வர தொடங்கினார்கள்.

Prince Harry, Meghan markle, royal wedding

11.40 மணியளவில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசரும், மணமகனுமான ஹாரி ஆகியோர் தேவாலயம் வந்தடைந்தனர்.

11.52 மணியளவில் பிரிட்டன் அரசு இரண்டாம் எலிசபெத் இங்கு வந்து சேர்ந்தார். சரியாக நண்பகல் 12 மணியளவில் மணமகள் மேகன் மார்க்லே காரில் வந்து இறங்கினார்.

சற்று நேரத்தில் இளவரசர் சார்லஸ் மணமகளின் கையை பற்றியபடி தேவாலயத்திற்குள் அழைத்து சென்றார்.

பின்னர் இசைக்குழுவினரின் பிரார்த்தனை பாடல்களுடன் திருமண மடல் வாசிக்கப்பட்டது.

Prince Harry, Meghan markle, royal wedding

இந்திய நேரப்படி மாலை 5.10 மணியளவில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் விண்ட்சோர் நகர் வீதியில் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சாரட் வண்டியை விண்ட்சோர் நகரின் பழமை வாய்ந்த தெருக்களின் வழியாக 4 குதிரைகள் இழுத்து சென்றன.

Prince Harry, Meghan markle, royal wedding

சாலைகளின் ஓரம் பிரிட்டன் நாட்டு கொடிகளை கைகளில் ஏந்தியபடி பல்லாயிரக்கணக்கான மக்கள் மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கினர்.

பிரிட்டன் அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை உலகில் உள்ள 80 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர்.

திருமணம் நடைபெற்ற இடம் மற்றும் நகரின் மற்ற பகுதிகளில் ஏராளமான பொலிசாரும், உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Prince Harry, Meghan markle, royal wedding

Prince Harry, Meghan markle, royal wedding

Prince Harry, Meghan markle, royal wedding

 

(tamilnews Royal wedding 2018 Prince Harry Meghan married Windsor)

More Tamil News

Tamil News Group websites :