உயிர்த் தியாகம் செய்தவர்களை தமிழினப் படுகொலையாளர்களாக சித்தரிக்கின்றனர் – மஹிந்த ராஜபக்ஸ

0
631
tamilnews Mahinda Rajapaksa portrays victims Tamils assassins

(tamilnews Mahinda Rajapaksa portrays victims Tamils assassins)

பொது மக்களுக்கு சுதந்திரத்தையும், வாழ்வதற்கான உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு, தமது சொந்த வாழ்வையும், உடல் உறுப்புக்களையும் தியாகம் செய்து அர்ப்பணித்தவர்கள் அனைவருமே கொண்டாடப்பட வேண்டிய மனிதர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தகைய மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களை இனப்படுகொலையாளிகள் போன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் சித்தரிப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

மே 18 நினைவேந்தல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதனை இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்வது இந்த யுகத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய துரோகம்.

வடக்கில் தமிழ் மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்வதற்கும், தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு யுத்தமற்ற அமைதி கிடைத்திருப்பதும் எமது இராணுவ வீரர்கள் செய்த அர்ப்பணிப்பு காரணமாகத்தான் என்று அவர் தெரிவித்தார்.

எனவே, இலங்கை மக்களுக்கு மரண பயம் இன்றி வாழ்வதற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த இராணுவ வீரர்களை நாங்கள் மிகவும் மரியாதையுடனும் பெருமையுடனும் நினைவு கூற வேண்டும்.

அவர்களை பழிவாங்கும் முயற்சியை தோற்கடிப்பதற்காக நாம் முன் நிற்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

(tamilnews Mahinda Rajapaksa portrays victims Tamils assassins)

More Tamil News

Tamil News Group websites :