தாழமுக்கம் மேலும் வலுப்பெற்றது – சீரற்ற காலநிலை தொடரும்

0
913
rain country all districts heavy thunder warning meteorology department

rain country all districts heavy thunder warning meteorology department
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை மேலும் வலுபெற்று வருவதாக, வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலை மேலும் வலுப்பெருமாயின் நாட்டின் பல பாகங்களில், அடுத்த வாரத்தில் அதிக மழையுடனான காலநிலை நிலவும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று பிற்பகல் வேளை மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் நிலவுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரவித்துள்ளது.

இதேவேளை, புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, அதிக மழையுடனான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக, அனத்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

தெதுரு ஓயா நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகளும் உடவலவ நீர்தேக்கத்தின் ஒரு வான் தகவும், கலாவெள குளத்தின் ஒரு வான் கதவும் திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
rain country all districts heavy thunder warning meteorology department

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :