நல்லிணக்க அரசாங்கத்திலிருந்து விலகப் போகும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி

0
607
Maithripala announced Freedom Party ready withdraw national government

(Maithripala announced Freedom Party ready withdraw national government)

நல்லிணக்க தேசிய அரசாங்கத்திலிருந்து ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான தினத்தை தயார்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாக முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் சுட்டிக்காட்டினார்.

(Maithripala announced Freedom Party ready withdraw national government)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :