ஜனாதிபதியுடன் இந்திய இராணுவ தலைமை அதிகாரி பேச்சுவார்த்தை

0
451
Indias Chief Army Staff General Bipin Rawat reach Colombo

(Indias Chief Army Staff General Bipin Rawat reach Colombo)

இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்துள்ள இந்திய இராணுவ அதிகாரி ஜெனரல் பிபின் ராவட் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று சந்தித்தார்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அயல் நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவிவரும் நற்புறவுகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த உறவினை தொடர்ந்தும் பலப்படுத்துவது இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான புலனாய்வு தகவல் பிரிவுகளை பலப்படுத்துதல், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இதற்கு இலங்கை அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக இந்திய இராணுவ அதிகாரி தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவை பயிற்றுவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் நவீன தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தீவு நாடு என்ற வகையில் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் காரணமாக இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை தடை செய்வதற்கு இந்திய இராணுவத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதியினால் இந்திய இராணுவ அதிகாரிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் கலந்துகொண்டார்.

(Indias Chief Army Staff General Bipin Rawat reach Colombo)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :