government considering granting imprisonment children care parents
பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்குவது குறித்து இந்திய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்காத அவர்களது பிள்ளைகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை என்பது தற்போது அமுலில் இருக்கிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007இன்படி இதை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்தத் தண்டனை போதாது. அதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இந்த சிறைத் தண்டனை 3 மாதத்தில் இருந்து 6 மாதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை பரிந்துரை செய்துள்ளது. இதற்காக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு வரைவு மசோதா 2018ஐயும் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் 10 ஆயிரம் ரூபா பராமரிப்புத் தொகையை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இதில் செய்யப்பட்டுள்ளன.
தற்போதுள்ள சட்டத்தின்படி மகன், மகள்கள், பேரக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் தண்டனை பொருந்தும். ஆனால் புதிய வரைவு சட்டத்தில் மருமகன், மருமகள், பேரக்குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட மகன், மகள்கள், மாற்றாந்தாய் குழந்தைகளையும் சேர்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் விட்டாலோ அல்லது அநாதையாக விட்டாலோ அல்லது மாதம்தோறும் பராமரிப்புத் தொகையைத் தராவிட்டோலோ அவர்கள் பெற்றோர் பராமரிப்பு தீர்ப்பாயத்தை அணுகி நீதியைப் பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த வரைவு சட்டம் இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை நடத்தி வருவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
government considering granting imprisonment children care parents
More Tamil News
- குட்கா போதைபொருள் முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
- வாரணாசியில் மேம்பால விபத்து – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
- நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் – எடியூரப்பா
- நிலக்கரி பிரச்சனை : தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்!
- விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!
- சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!
- எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!
- கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு!
- கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது : நடிகர் பிரகாஷ் ராஜ்!
- நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!
- சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
- பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!
- போதையில் பேருந்து ஓட்டியவரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- காவலர் அருங்காட்சியகம் – முதன்முறையாக தமிழகத்தில் திறப்பு!
TAMIL NEWS GROUP WEBSITES :