எரிபொருள் விலை உயர்கின்றது!

0
290
Canada Petrol Price Hike

Canada Petrol Price Hike

கனடாவின் பல இடங்களில் இவ் வார இறுதியில் எரிபொருளின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“விக்டோரியா டே” நீண்ட வார இறுதி விடுமுறை காலப்பகுதியில், வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோருக்கு, இவ் விலை அதிகரிப்பு பயணச் செலவில் அதிகரிப்பினை ஏற்படுத்தவுள்ளது.

எனினும நாட்டின் ஒவ்வொரு பாகங்களிலும் விலை அதிகரிப்பின் அளவு வேறுபட்டுக் காணப்படும் எனவும், அந்த வகையில் ஒன்ராறியோ, மரிட்டைம்ஸ், மனிட்டோபா, சாஸ்காச்சுவான் ஆகிய மாநிலங்களிலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அல்பேர்ட்டா மற்றும் கியூபெக் மாநிலங்களில் அண்மையில் காணப்பட்ட எரிபொருள் உச்ச விலையுடன் ஒப்பிடுகையில், அங்கு எரிபொருள் விலை குறைவடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை ரொரன்ரோ, ஹமில்ட்டன், ஒட்டாவா உள்ளிட்ட பெரும்பாலான ஒனராறியோவின் தென் பிராந்தியங்களில பெற்றோலின் விலை லீட்டருக்கு ஒரு சதத்தினால் அதிகரிக்கப்படுகின்றது எனவும், நாளை சனிக்கிழமை மேலும் ஒரு சதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி பெற்றோலின் விலை லீட்டருக்கு 140.9 சதத்தினைத் தொடவுள்ள நிலையில், இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட ஆக உச்ச விலை என்று கூறப்படுகிறது.