woman stabbed death husband arrested police head thrown death
குடும்ப தகராறு காரணமாக மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை கணவனை தமிழகத்தில் சேலம் பகுதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்தக் கொலை தொடர்பில் பொலிஸார தெரிவித்துள்ளதாவது,
சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும், அடிக்கடி மனைவியின் தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கிவருமாறு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்றானநேற்று சரவணன் குடிபோதையில் இருந்துள்ளார். இதனையடுத்து கணவன்- மனைவிக்கிடையே வழக்கம்போல் குடும்ப தகராறு முற்றியது. இதில், சரவணன் மனைவியின் தலையின் மீது கல்லை தூக்கிப் போட்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே மனைவி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதை கண்கூடாக பார்த்து பிள்ளைகள் கதறியதில் அயலவர்கள் ஓடிவந்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மனைவியை கொலை செய்ததாகக் கூறப்படும் சரவணனை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
woman stabbed death husband arrested police head thrown death
More Tamil News
- விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!
- சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!
- எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!
- கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு!
- கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது : நடிகர் பிரகாஷ் ராஜ்!
- நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!
- சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
- பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!
- போதையில் பேருந்து ஓட்டியவரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- காவலர் அருங்காட்சியகம் – முதன்முறையாக தமிழகத்தில் திறப்பு!
Tamil News Group websites :