விசேட அதிரப் படையின் சோதனையில் ஹெரோயினுடன் மூவர் கைது

0
125
tamilnews three Suspects nabbed heroin ratmalana

(tamilnews three Suspects nabbed heroin ratmalana)

இரத்மலானை, புகையிரத நிலைய வீதி பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு சோதனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 24 கிராம் 610 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 22, 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (18) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 7 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(tamilnews three Suspects nabbed heroin ratmalana)

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :