(tamilnews mullivaaikal memorials held on north and east)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருக்கோணமலையில் பரவலாக அனுஷ்டிக்கப்பட்டதாக தமிழ் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.
திருக்கோணமலை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல இடங்களில் பொது மக்களாலும் அரசியல் கட்சிகளாலும் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழின படுகொலை நினைவேந்தல் நிகழ்வாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினால் வாகரை நாகபுரத்தில் இன்று மதியம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் பிரதேசத்தில் பட்டித்திடல் பிள்ளையார் கோவில், மணற்சேனை முருகன் கோவில், பள்ளிக்குடியிறுப்பு சங்கபுரம் மூதூர், கிழக்கு போன்ற பிரதேசங்களிள் பொதுமக்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
மேலும், தமிழரசு கட்சியினர் திருகோணமலை நகரின் சிவன் கோயிலடி தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்கட்சி தலைவர் ஆர் .சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் கோவில் வீதி நல்லூரில் அமைந்திருக்கும் சுதந்திரக் கட்சி அலுவலகத்திலும் உணர்வுபூர்வமான முறையில் இடம்பெற்றிருந்தது.
இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதிநித்தித்துவம் வகிக்கும் மாநகர மற்றும் நகரசபை, பிரதேச சபை பிரதிநிதிகளும் அவர்களோடு இளைஞர் யுவதிகள் என பலரும் ஆத்ம அஞ்சலியில் உணர்வுபூர்வமான முறையில் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை, மே 18 ஆம் திகதி இடம்பெற்ற இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூறும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டு வந்த வேளையில் நிறுத்தப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவாலயத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றன.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று மாலை 6.00 மணிக்கு இடை நடுவில் நிறுத்தப்பட்ட நினைவாலயப் பகுதியில் கூடி, சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவாலயத்தின் பொதுச் சுடரைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் ஏற்றி வைக்க கூடி நின்ற மாணவர்கள் அடுக்கி வைக்கப்பட்ட சுடர்களை ஏற்றினர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பால் மக்களை வழிநடத்தும் வகையில் காலத்துக்குக் காலம் மாவீரர் நினைவாலயம், பொங்கு தமிழ்ப் பிரகடன நினைவிடம் ஆகியவற்றைப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைத்து, அடக்கு முறைகளுக்கு மத்தியிலும் அந்தந்தக் காலங்களில் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் கடந்த மாதம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உரிய அறிவித்தல்கள் வழங்கப்பட்ட பின், வளாகத்தினுள் மாவீரர் நினைவாலயத்துக்குத் தெற்குப் புறமாக முள்ளிவாய்க்கால் நினைவாலயக் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும், இனவாத அரசின் அடக்கு முறை வெளிப்பாடாக கொழும்பிலிருந்து கிடைத்த உயர் மட்ட அழுத்தங்கள் காரணமாக அதன் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதேவேளை, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை இன்றைய தினம் காலை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து கூட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய அடக்கு முறைகள் மூலம் மாணவர்களின் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்தி விட முடியாது என்ற செய்தியைச் சொல்வதற்காகவே இந்த அறைகுறைக் கட்டுமானங்களுடனான நினைவாலயத்தில் இன்றைய மாலை நிகழ்வுகள் இடம்பெற்றன என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் தெரிவித்தார்.
(tamilnews mullivaaikal memorials held on north and east)
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com