ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

0
2054
Sridevi planned murder retired ACP sensational information,Sridevi planned murder retired ACP sensational,Sridevi planned murder retired ACP,Sridevi planned murder retired,Sridevi planned murder

(Sridevi planned murder retired ACP sensational information)

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல.., அது திட்டமிட்ட கொலை என, ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் வேத் பூஷன் பரபரப்புத் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

நாத்தனார் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் உள்ள நிலையில் அவரின் மரணம் திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.

வேத் பூஷன் தனியார் துப்பறியும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தைப் பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெரிகிறது என்கிறார் வேத் பூஷன்.

அதாவது, ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்யும்போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம் என்று வேத் கூறியுள்ளார்.

நான் துபாய் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால் துபாய் பொலிஸ் அளித்த தடயவியல் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன என்று தெரிய வேண்டும். நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் துபாய் சென்றோம் என்கிறார் வேத்.

துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால் அவர் தங்கியிருந்த அறையில் எங்களை நுழைய விடவில்லை.

அதனால் பக்கத்து அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. எதையோ மறைக்கிறார்கள் என்று வேத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், அவரின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 11ஆம் திகதி தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

கண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..?

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான் : நியூ அப்டேட்..!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் : திரை விமர்சனம்..!

“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..!

Tags :-Sridevi planned murder retired ACP sensational information

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகிய உறவுகளுக்கு ஒரு கணம்..!