(school youth care blamed boy drowning)
நடத்தையில் பிரச்சனை உடைய 17 வயதுடைய இரு இளைஞர்கள் பள்ளி நேரத்தில், போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், வெளியே நழுவிச் சென்று அருகிலிருந்த நதி ஒன்றில் நீந்தச் சென்றனர்.
பள்ளி முகாமை மற்றும் இளைஞர்கள் காப்பகத்தின் கவனக்குறைவினால் இவ்விரு இளைஞர்களும் வெளியே செல்ல முடிந்தது என விசாரணையில் தெரிய வந்தது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு மே மாதம் ரைன் ஆற்றில் இந்த இரு இளைஞர்களில் ஒருவர் மூழ்கி இறந்தார்.
விசாரணையின் பின்னர் பள்ளி முகாமையை கவனிக்க 3 பிரத்தியேக சோதனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விளைஞர்கள் இருவரும் Otto Gerhard Heldringstichting இல் தங்கியிருந்து அருகிலிருக்கும் De Brouweri பாடசாலையில் கல்வி கற்று வந்தனர். இந்நதியில் நீந்தச் சென்றவர்களில் ஒருவர் நீருக்குள் மூழ்கினார். அவரது உடல் அன்றைய தினம் மாலையில் மீட்கப்பட்டது.
கல்வி, சுகாதாரம், நீதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான சோதனையாளர்கள் இந்த சம்பவத்தை விசாரித்தனர். மேலும் இந்த அமைப்புகள் இரண்டும் போதுமான பராமரிப்பை ஏற்படுத்தும் வரை அவ்வப்போது திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
school youth care blamed boy drowning, school youth care blamed boy, school youth care blamed, school youth care, youth care blamed boy drowning, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!