முள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்!

0
1215
Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Article

(Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Article)

2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம் இனஅழிப்பில் குறியாக இருந்த இலங்கை அரசுடன் கைகோர்த்து தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்தி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ஒன்பதாம் ஆண்டின் நினைவு தினம் இன்று ஆகும்.

வன்னியின் அனைத்து இடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் குவிந்திருந்த மக்களை இலக்குவைத்து பெரும் எடுப்பில் எறிகணை தாக்குதல்கள் மற்றும் பொஸ்பரஸ் இரசாயன குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

இதன்போது குழந்தைகள், பெண்கள், முதியோர் என்கின்ற வேறுபாடின்றி வகைதொகையாக மக்கள் கொல்லப்பட்ட அவலம் இலங்கை அரசால் நிகழ்ந்தேறிது.

அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் ஆயுத மௌனிப்பு செய்துகொண்ட போது இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் மற்றும் முன்னாள் போராளிகள் இரகசிய இடங்களிட்கு கொண்டு செல்லப்பட்டு கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

இந்த மனித பேரவலம் நிகழ்ந்த போது கண்மூடி இருந்த சர்வதேச சமூகம் இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டுமன்றி இனப்படுகொலைக்கான நீதி கோரலை சரியாக செவிமடுக்காமல் சர்வதேச நீதிமன்றில் இனவழிப்பு செய்த இலங்கை அரசாங்கத்தை தப்ப செய்யும் முறையில் கைகொடுத்து வருகிறது.

எனவே சர்வதேச சமூகத்தின் பார்வையை எமது நீதி குரலின் பக்கம் திசை திருப்ப உலகளாவிய ரீதியில் எமது தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமது அழிவுகளை வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச விசாரணை பொறிமுறையை செயல்படுத்தகூடிய நடைமுறைகளுக்கு எமது தமிழ் கட்சிகள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மனித ஆன்மாவை உலுக்கும் அடையாளமாக மாறிப்போன முள்ளிவாய்க்கால் அவலத்தை வெறும் நினைவு தினமாகமட்டுமன்றி உலக நீதி கோரலுக்கு தமிழரை அணி திரட்டும் விடயமாக மாற்றவேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவை.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு