கடத்தலைத் தடுக்க நவீன சோதனைச்சாவடிகள் – தமிழகஅரசு!

0
562
Modern checkpoints prevent kidnapping - Tamil Nadu

Modern checkpoints prevent kidnapping – Tamil Nadu

திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் 137,18,00,000 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன ஒருகிணைந்த சோதனை சாவடி மையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் – செம்மரம், கஞ்சா, மணல், ரேஷன் அரிசி ஆகியவை கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்,

நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய நவீன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் மற்றும் வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட 8 துறைகள் மூலம் இங்கு சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்,

இந்த சோதனைச் சாவடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :