மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!

0
167
Manchester City manager Pep Guardiola signs new deal

(Manchester City manager Pep Guardiola signs new deal)

மென்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்றுவிப்பாளர் பெப் கார்டியோலாவின் ஒப்பந்தக்காலம் 2021ம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பெப் கார்டியோலாவின் பயிற்சியின் கீழ் பிரீமியர் லீக்கில் விளையாடிய மென்செஸ்டர் சிட்டி அணி 100 புள்ளிகள் சாதனையுடன், பிரீமியர் லீக் கிண்ணத்தை வென்றிருந்தது.

இதன் பலனாக 2016ம் ஆண்டு முதல் மூன்று வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்த பெப் கார்டியோலாவின் பயிற்சிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021ம் ஆண்டுவரை இவர் மென்செஸ்டர் சிட்டி அணியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பெப் கார்டியோலா,

”மென்செஸ்டர் அணியுடன் இணைந்து செயற்படுவது மிக மகிழ்சியான விடயம். இவ்வாறான வீரர்களுடன் பணியாற்றுவது பெருமைக்குறிய விடயம்.

ஒவ்வொரு நாளும் நாம் எங்களது முழு திறமையையும் வெளிக்காட்ட முயற்சிக்கிறோம். ஒரு பயிற்றுவிப்பாளருக்கு தேவையான விடயம் வீரர்களின் ஒத்துழைப்பு. அது எனக்கு மென்செஸ்டர் சிட்டி அணியில் கிடைத்துள்ளது” என்றார்.

இம்முறை பிரீமியர் லீக் தொடரில் 106 கோல்களுடன் 32 வெற்றிகளை பெற்றுள்ள மென்செஸ்டர் சிட்டி அணி, வெறும் 16 புள்ளிகளை மாத்திரமே பெறத் தவறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

<<Tamil News Group websites>>