பிரான்ஸில், மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான விமான சேவை!

0
484
Kid's Dreams Organizations given free ride disabled children

மாற்றுத்திறனாளிகள் இல்லத்திலிருந்து 146 சிறுவர்களை விமானத்தில் ஏற்றி வலம் வந்துள்ள சம்பவம் ஒன்று Seine-et-Marne இன் Melun நகரத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. Kid’s Dreams Organizations given free ride disabled children
Kid’s Dreams எனும் தன்னார்வத்தொண்டு அமைப்பொன்று உலகம் முழுவதும் இருந்து சிறுவர்களை விமானத்தில் பறக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இதுவரை எல்லா நாடுகளிலும் இருந்து 26,906 சிறுவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார்கள்.

Melun இல் உள்ள 146 மாற்றுத்திறனாளியான சிறுவர்களை இரண்டு விதமான விமானங்களில் ஏற்றி பறக்க வைத்துள்ளனர். சக்கர நாற்காலியில் இருந்து சிறுவர்களுக்கு விடுதலை அளிக்கும் நோக்கத்துடன், பயிற்சிவிக்கப்பட்ட உதவியாளர்களுடன் மருத்துவர்களும் குழுவில் இருக்க, சிறுவர்களை விமானத்தில் ஏற்றி Melun நகரை சுற்றி வந்துள்ளனர்.

இதனை அச் சிறுவர்களின் பெற்றோர்கள் கீழே நின்று கை அசைத்து அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் இந்த விமான பயணத்தை மேற்கொண்டதாகவும், அவர்கள் தங்கள் வாழ்நாளில் முதன் முறையாக விமானத்தில் பறந்தார்கள் எனவும் Kid’s Dreams அமைப்பினர் தெரிவித்தனர். இதனை பார்த்த அனைவரும் மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**