பல்கேரிய உறுப்பினர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி!

0
199
France president visit Bulgaria meet EU members

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தை ஒன்றிற்காக பல்கேரியாவிற்கு சென்றுள்ளார். அவரைப் போல் ஜேர்மன் அதிபர் அங்கலோ மெக்கில் மற்றும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே ஆகியோரும் பல்கேரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். பல்கேரியா, சோபியாவில் நேற்று பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடியுள்ளனர். அவர்கள் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முன்னர் ஆழமான கலந்துரையாடலினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. France president visit Bulgaria meet EU members

குறித்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது மேற்கு பல்கேரிய உறுப்பினர்களை சந்தித்தவுடன் Brussels பிராந்தியத்தினை ஐரோப்பியாவிற்கு நெருக்கமாக்குவதனைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு பல்கேரிய நாடுகளில் சிலவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக இணைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.

பல்கேரிய நாடுகள் மீது ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கினை, அல்பேனியா, போஸ்னியா-ஹெர்சிகோவினா, கொசோவோ, மாசிடோனியா, மன்டினீக்ரோ மற்றும் செர்பியா போன்ற நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என பல்கேரிய நாட்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காகவே பல்கேரியாவின் சோபியாவில் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**