தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் – ஸ்டாலின்

0
540
ADMK backed BJP criticized DMK unforgivable betrayal TamilNadu

DMK participate meeting Kamal Haasan including leaders parties

தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் நடிகர் கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்  என  தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பங்கேற்கும் அனைத்துக்கட்சி கூட்டம் நாளை 19ஆம் திகதி நடைபெறும் என அறிவித்திருந்தார்.

ஆனால், கமல் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க நல்லக்கண்ணு ஒப்புக்கொள்ளவில்லை என முத்தரசன் கூறியிருந்தார்.
மேலும், நல்லக்கண்ணும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, அவரிடம் தி.மு.க. தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DMK participate meeting Kamal Haasan including leaders parties

More Tamil News

Tamil News Group websites :