சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

0
283
Bhuvanes director Human Rights Group , malaysia tami news, malaysia, malaysia news, Bhuvanes,

Bhuvanes director Human Rights Group }

மலேசியா: சன்வே தங்கும் விடுதி மற்றும் சுற்றுலா விடுதியின் புதிய மனித வளத்துறை குழும இயக்குனராக புவனேஸ் கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மனிதவளத்துறையின் மேலாண்மையின் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் தலைமைத்துவ அபிவிருத்தி மூலம் செயல்திறனை அதிகரிக்க செய்யவும் பொறுப்பேற்பார்.

புவனேஸ் எங்கள் தலைமைத்துவத்தில் இருப்பதை நாங்கள் மகிழ்ச்சியாக வரவேற்பதோடு அவர் எங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவார் என எதிர்ப்பார்ப்பதாக சன்வே தங்கும் விடுதி மற்றும் சுற்றுலா விடுதியின் தலைமை நிர்வாக அதிகாரி தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

புவனேஸ் கிருஷ்ணசாமி சன்வேயில் இணைவதற்கு முன்னர், மலேசியாவில் அமைந்துள்ள நோவோசைமஸில் (Novozymes), தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான பொறுப்பாளராகவும், அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் புத்ரா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலைப் பட்டம் பெற்றதோடு லங்கெஸ்டர் மற்றும் சன்வே பல்கலைக்கழகங்களின் வணிகத் திட்டத்தில் இரட்டை சான்றிதழ் பெற்றவர் ஆவார்.

Tags: Bhuvanes director Human Rights

<< RELATED MALAYSIA NEWS>>

*சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபர் கைது!

*நஜிப் வீட்டில் சோதனை செய்த செய்தி தொடர்பில் எந்த தகவலையும் வாட்ஸ்-ஆப் இல் பகிர வேண்டாம்..

*அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!

*தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்

*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!

*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

<<Tamil News Groups Websites>>