உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)

0
664

(ab de villiers catch ipl 2018)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் சன்ரைசஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் எடுத்த பிடியெடுப்பொன்று தற்போது வைரலாக பரவிவருகின்றது.

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் சன்ரைசஸ் அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் அபார துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினார். இவர் 24 பந்துகளுக்கு 37 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மொஹின் அலி வீசிய பந்தை எல்லைக்கோட்டு பகுதிக்கு விளாசினார்.

துடுப்பாட்டம் நிச்சயமாக ஒரு ஆறு ஓட்டமாக இருந்தாலும், குறித்த பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட வில்லியர்ஸ் அதனை இலாவகமாக பிடித்து அலெக்ஸ் ஹேல்ஸை ஆட்டமிழக்கச் செய்தார்.

தற்போது இந்த பிடியெடுப்பின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருவதுடன், இவ்வருடத்தின் சிறந்த பிடியெடுப்பு இதுதான் எனவும் பாராட்டப்பட்டு வருகின்றது.

<<Tamil News Group websites>>