எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!

0
778
Congress-Maj - intensify: MLAs retire midnight

Congress-Maj – intensify: MLAs retire midnight

கர்நாடகத்தில் ஈகிள் டன் ஹோட்டலில் நுழைந்த முக்கிய புள்ளிகள் குதிரை பேரத்தை நேரடியாக தொடங்கியதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ’க்கள் மாநிலத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கும், ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் ஐதராபாத் மற்றும் கொச்சிக்கு அழைத்துச் செல்லபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது,

சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் கண்ணாம்பூச்சி ஆட்டம் தொடங்கிவிட்டது, இதனால் உஷாரான காங்கிரஸ் மேல் இடம் 78 எம்.எல்.ஏக்களையும் ஈகிள் டன் ஹோட்டலில் தங்க வைத்து திடீரென அங்கே போலீஸ் பாதுகாப்பு விலகியதால் முக்கிய புள்ளிகள் ஹோட்டலில் புகுந்து பேரம் பேச தொடங்கினர்,

அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் மேல் இடம் விமானம் ஒன்றை புக் செய்து எம்.எல்.ஏக்களை கொச்சி கொண்டு செல்ல முடிவு செய்தது, ஆனால் விமானம் புறப்பட அனுமதி கிடைக்காததால் பேருந்து மற்றும் கார்களில் எம்.எல்.ஏக்கள் புறப்பட்டு சென்றனர்,

இதேபோல் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் 37 போரையும் குமாரசாமி சந்தித்து பேசினார், அப்போது பேசிய குமாரசாமி – குதிரை பேரத்தை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்தவே காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கூட்டாக உள்ளனர் என்றார், மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரச்சனையில்லை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதே முக்கியம் என்றார்,

உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வர உள்ளது.

More Tamil News

Tamil News Group websites :