இத்தாலி ஓபன் காலிறுதியில் கரோலின் வஷ்னியாக்கி!

0
594
Italy Open 2018 Caroline Wozniacki news Tamil

(Italy Open 2018 Caroline Wozniacki news Tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் கரோலின் வஷ்னியாக்கி வெற்றிபெற்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தொடரின் மூன்றாவது சுற்றில் வஷ்னியாக்கி, லட்வியாவின் அனஸ்தேசியா செவஸ்தோவாவை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இருவரும் சிறப்பாக ஆடினர்.

இறுதியில் 2-1 என்ற செட் கணக்கில் வஷ்னியாக்கி வெற்றிபெற்றார்.

போட்டியின் முதல் செட்டை 6-2 என கைப்பற்றி வஷ்னியாக்கி முன்னிலைப்பெற, அடுத்த செட்டை செவஸ்தோவா 7-5 என கைப்பற்றி போட்டியை சமப்படுத்தினார்.

எனினும் இறுதி செட்டில் மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்திய வஷ்னியாக்கி 6-3 என செட்டை கைப்பற்றி, காலிறுதிக்கு முன்னேறினார்.

வஷ்னியாக்கி காலிறுதியில் எஸ்டோனியா வீராங்கனை அனாட் கொண்டாவெயிட்டை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>