நயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு – அதிர்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்!

0
1098
Yogi Babu loves Nayantara - Nayantara fans shocked

Yogi Babu loves Nayantara – Nayantara fans shocked

சிம்பு நடித்த ‘வேட்டைமான்’ படத்தை இயக்கியவர் நெல்சன், ஹன்சிகா உட்பட பலர் நடித்த இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் அப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது,

இதனையடுத்து நெல்சன் இயக்கம் படமான ‘கோலமாவு கோகிலா’ அதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், லைலா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்,

இப்படத்தின் கதையின் கருவும் வெளியானது – ஒரு பெண் வறுமைக்காக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறாள், அவளின் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை,அதில் போதைப் பொருள் கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடிக்கிறார்,

மேலும் டார்க் காமெடி படமாக உருவாகும் இதில் நடிகர் யோகி பாபு நயன்தாராவை ஒருதலையாகக் காதலிப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது, இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார்,

அப்பாடலின் முதல் இரண்டு வரிகள் : அவ முன்னால நிற்கிறேன், அவ கண்ணால சொக்குறேன், நான் தன்னால சிக்குறேன், பின்னால சுத்துறேன், முன்னால சாவுறேன் என்று பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்,

படத்துல இந்த பாடல் யோகி பாபுக்காகத்தான் என்றாலும் சிவகார்த்திகேயன் நடிச்சா எப்படி இருக்குமோ அந்த லுக்லதான் பாட்டு இருக்கும்,

இந்த வீடியோ பாடலை இன்று காலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்,

மேலும் படக்குழுவினர் கூறியது : யோகி பாபு நயன்தாராவை செம்ம பீலிங்கோடு காதலிக்கும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிப்பை வரவழைக்கிறது.

More Tamil News

Tamil News Group websites :