அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

0
296
Umno request appoint ministers immediately, malaysia tami news, malaysia, malaysia news, Umno,

{ Umno request appoint ministers immediately }

மலேசியா: அமைச்சரவைக்கான நியமனங்கள் குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் டஹ்லான் வலியுறுத்தியுள்ளார்.

14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து ஒரு வாரமாகியும் பக்காத்தான் அரசாங்கத்தின் அமைச்சரவை முழுமையாக நியமிக்கப்படாத நிலையில், இதர 7 அமைச்சுக்களுக்கான அமைச்சர்களின் அறிவிப்பிற்காக மக்கள் பீதியுடனும் கலக்கத்துடனும் காத்துக் கொண்டிருப்பதாக டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் டஹ்லான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பல கொள்கைகளும் திட்டங்களும் அமைச்சர்களால் அறிவிக்கப் படவில்லை எனவும் இது அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு எதிரானது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஜ.செ.க.வின் லிம் குவாங் என் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டது மக்களிடையே எதிர்மறை வரவேற்பை பெற்றது, இதற்கு ஓர் எடுத்துக் காட்டு என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

லிம் குவான் எங்கிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருப்பது மகாதீருக்கு தெரிந்திருந்தும் அவரை நிதியமைச்சராக அறிவித்துள்ளார்.

இது பற்றி மக்களால் கேள்வி எழுப்பப்பட்ட பின்னர் சட்டம் அனுமதித்தால் மட்டுமே லிம் குவான் எங் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள முடியும் என துன் மகாதீர் மாற்றிப் பேசுகின்றார் என அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.

அமைச்சரவை உறுப்பினர்களின் நியமனம் அரசியலமைப்பு மற்றும் ஆட்சியாளர்களின் மன்றத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் ஒழுக்கம் இல்லாத அமைச்சரவை நியமனம் நம் நாட்டின் ஒருமைப்பாட்டையும் மரியாதையும் சீர்குலைக்கும் வகையில் அமைய நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Umno request appoint ministers immediately

<< RELATED MALAYSIA NEWS>>

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

*428 கோடி நில ஊழல்: தெங்கு அட்னான் மீது விசாரணை செய்யுமாறு கோரிக்கை..?

*சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி

*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!

*ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!

*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

<<Tamil News Groups Websites>>