(UK Opposition Party Leader Jeremy Corbyn Warns Sri Lanka Government)
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நிலைநாட்டப்படாது விட்டால் தொடர்ந்தும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்றும் பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஸ்ரீலங்கா அரசை எச்சரித்துள்ளார்.
தமிழினப் படுகொலையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் பிரித்தானிய தொழிற் கட்சியின் தமிழர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்றைய தினம் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபினுடன், நிழல் வெளிவிவகா அமைச்சர் உள்ளிட்ட தொழிற் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின், இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் மோசமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்கான உரிமைகளையும், நீதியையும் உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கைகளை உள்ளடக்குவதாகவும் தொழில்கட்சியின் தலைவர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வாக்குறுதி அளித்தார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)