முன்பள்ளி மாணவர்களை வகுப்பு அறைக்குள் வைத்து பூட்டிய ஈ.பி.டி.பி உறுப்பினர்

0
362
tamilnews pre school student locked teacher epdp member

(tamilnews pre school student locked teacher epdp member)

யாழ்ப்பாண இருபாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த முன்பள்ளிப் பாடசாலை கல்வித் திணைக்களத்தினால் அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாடசாலையில் மாணவர்கள் கற்றுக்கொண்டிருந்த வேளை மாணவர்களை கல்வி நிலைய மண்டபத்தினுள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை பொறுப்பற்ற முறையில் வெளியே சென்றுள்ளார்.

மாணவர்கள் உள்ளே இருக்கும் போது சனசமுக நிலையம் பூட்டப்பட்டிருப்பதை அவதானித்த பிரதேச மக்கள் உரிய தரப்பினருக்கு அறிவித்திருந்தனர்.

அதன்படி, உடனடியாக அப்பகுதிக்கு வருகை தந்த கல்வித் திணைக் கழகத்தினரால் முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த ஞான ஒளி சனசமூக நிலையம் நீண்டகாலமாக நிர்வாக தெரிவுகள் எதுவும் இல்லாமல் இயங்கி வருவதுடன், சின்னஞ்சிறு மாணவர்களை தனித்து விட்டு கதவை பூட்டிச் சென்றமை தொடர்பில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆரம்ப பாடசாலையின் ஆசிரியையாக கடமையாற்றுபவர் வலி-கிழக்குப் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரின் விகிதாசார பட்டியலில் நியமிக்கப்பட்ட உறுப்பினர் சிந்துஜா சண்முகராசா என்பதும் குறிப்பிடத்தக்கது.

(tamilnews pre school student locked teacher epdp member)

 

More Tamil News

Tamil News Group websites :