(Tamil Ethnic slaughter mullivaikal Tribute Northern Provincial Schools)
வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை முற்பகல் 11 மணியளவில் அகவணக்கம் செலுத்துமாறு வடமாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், அனைத்துப் பாடசாலைகளிலும் வடக்கு மாகாண சபையின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அனைத்து பாடசாலை அதிபர்களையும் கேட்டுக்கொள்வதாக வடமாகாண கல்விமைச்சர் க. சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
நாளைய தினம் தமிழர் தாயகப் பிரதேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு, வடமாகாண கல்வியமைச்சர் க. சர்வேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 70 ஆண்டு கால எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் நாம் போராடி வந்துள்ளோம்.
எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு, கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி பன்னாட்டுச் சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி மௌனிக்கச் செய்யப்பட்டது.
கடந்த முப்பதாண்டு போராட்டத்தில் நாம் ஏராளமான இளையோர் உள்ளிட்ட இலட்சக்கணக்கான உயிர்களை களப்பலி கொடுத்துள்ளோம்.
இறுதியாக எம்மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.
எமது இனத்தின் உரிமைக் குரலுக்கான போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதையும், மடிந்துபோன எமது உறவுகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் பன்னாட்டுச் சமூகத்திற்கு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.
எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Tamil News
- எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க
- அரச வைத்திய அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம்; நோயாளர்கள் சிரமம்
- அரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்
- இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி
- கிளிநொச்சியில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி ; தென்கொரியா நிதியுதவி
- வலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
- திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
- பாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்
- யாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை
- தமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது
- 4ம் எண் ராசியில்லை; துறவியாக்க முயற்சித்த தாய்; அம்மா வேண்டும் என கதறிய சிறுவன்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Tamil Ethnic slaughter mullivaikal Tribute Northern Provincial Schools