Sydney Girl assaulted Home
சிட்னியில் வீடொன்றுக்குள் பின் வழியாக நுழைந்து சிறுமியொருவரிடம் மோசமாக நடந்துகொண்ட நபர் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் அச்சிறுமியை பல நாட்களாக பின் தொடர்ந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்து சிறுமியின் அறைக்குள் சென்று அவரிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இச்சம்பவத்தில் சிறுமி உடல் ரீதியாக காயமடையாத போதிலும், உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
அந்நபரை பொலிஸார் தொடர்ந்தும் தேடிவருவதுடன், தேடல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் சி.சி.டிவி காணொளி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் , தகவல் தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் இடம்பெற்ற Kஇங்ச்fஒர்ட் பகுதியில் உள்ள வீடுகளில் இரவு நேரத்தில் ஜன்னல்களை அடைத்து மூடிக்கொள்ளும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.