ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன் : பொங்கியெழுந்த மக்கள்

0
893
student knife attack teacher haputale

(student knife attack teacher haputale)

ஹப்புத்தளை – கோனமுட்டா மேல்பிரிவு தோட்டத்தில் ஆசிரியை ஒருவரை, கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய 17 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை பாடசாலையில் இருந்து வீடு செல்லும் வழியில், இடைநடுவில் வழி மறித்து குறித்த இளைஞரால் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, பலத்த காயங்களுக்கு உள்ளான 32 வயதுடைய ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியையை தாக்கிய சந்தேகத்திற்குரிய இளைஞரையும் அவரது குடும்பத்தினரையும் அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்து, தோட்ட மக்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :