தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவன்!

0
702
student committed suicide father's drink

student committed suicide father’s drink

தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவன் தினேஷ் 12’ம் வகுப்பில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த குருக்கள்பாட்டியை சேர்ந்த தினேஷ் நல்லசிவம் என்ற மாணவன் 12’ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார், கூலித்தொழிலாளி இருவரது தந்தை மாடசாமி தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது,

இந்நிலையில் மனமுடைந்த மாணவன் தினேஷ் வீட்டை விட்டு வெளியேறினார், அவரை பல்வேறு பகுதிகளில் குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழி சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாணவர் தினேஷ் சடலமாக மீட்கப்பட்டார்,

அவரது உடலை கைப்பற்றிய பாளையங்கோட்டை போலீஸார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர், மாணவர் இறந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட பையில் நீட் தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு, 10’ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இறப்புக்கு முன் எழுதிய வைத்த கடிதம் இருந்தன,

அந்த கடிதத்தில் மேலும் எமது தந்தை குடிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர் அப்போதுதான் எமது ஆத்மா சாந்தி அடையும் எழுதியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :