(sri lanka weather today special report)
எதிர்வரும் 6 மணித்தியாலங்களுக்கு பல மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இந்த மழையுடன் பலத்த இடி மின்னல் ஏற்படக்கூடும்.
இதனுடன் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும்.
தற்போது குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதுடன், இந்த நிலை மேலும் பல மணித்தியாலங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் இடி மின்னலின் போது பாதுகாப்பாக இருக்குமாறு காலநிலை அவதான நிலையம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
அவசர நிலைகள் ஏற்படின் பிரதேச அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளின் உதவிகளை பெற முடியும்.
இதேவேளை, மன்னாரில் இருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அப்பகுதிகளில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை துரிதமாக அதிகரிக்கும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கடற்றொழிலாளர்களும், கடற்படையும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளதால் கொழும்பு – 7, மேட்லேன் பகுதியில் போக்குரவத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மாளிகாவத்தையில் அதிர்ச்சி : குழந்தை மர்மமாக உயிரிழந்த சம்பவம்: காரணம் வெளியானது, பெற்றோர் கைது
- ‘மிஸ் அங்கே பாருங்கள் பாம்பொன்று” : பலநாள் நூதன திருடன் சிக்கினான்
- கண்டி கலவரம் : திலும் அமுனுகமவின் கைத், தொலைபேசியை கைப்பற்றி பயங்கரவாத புலனாய்வு பிரிவினர்
- இலங்கைக்கு வந்து ஒரு சில மணிநேரத்தில் மர்மமாக காணாமல் போன சீன நாட்டவர் : தீவிரமாக தேடும் படையினர்
- மே 18 ஆம் திகதி : கவலையளிக்கிறது என்கிறார் மஹிந்த
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:sri lanka weather today special report,sri lanka weather today special report
-
-