லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு

0
738
Sarath Fonseka involved murder Lasantha Wickrematunge

(Sarath Fonseka involved murder Lasantha Wickrematunge)
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு தொடர்ப்புள்ளதாக ஐந்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்கிமதுங்க படுகொலை செய்யப்பட்டதற்கும், ஊடகவியலாளர்களான கீத் நோயார் மற்றும் உபாலி தென்னகோன் தாக்கபட்டதற்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொசேகாவிற்கு தொடர்புள்ளதாக மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

ஆதாரங்களுடன் தான் சுமத்தும் இந்த குற்றச்சாட்டை அரசில் பொறுப்புள்ள எவரும் நிராகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக உண்மையில் கைதுசெய்யப்பட வேண்டியவர் சரத் பொன்சேகா என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை கைது செய்வது ஒரு தூண்டுதலாக பலர் நபர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகாவை சந்தேகிக்கப்படும் பல வழக்குகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஐந்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஜனாதிபதியை சந்தித்து தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Sarath Fonseka involved murder Lasantha Wickrematunge