தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ள பெங்களூர்… : இன்று சாதிக்குமா?

0
128
royal challengers bangalore vs sunrisers hyderabad 2018 news Tamil

(royal challengers bangalore vs sunrisers hyderabad 2018 news Tamil)

ஐ.பி.எல். தொடரில் அடுத்து நடைபெறவுள்ள ஒவ்வொரு போட்டிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தீர்மானிப்பதாக அமைந்துள்ளது.

அந்தவகையில் இன்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவாகியுள்ள ஹைதராபாத் அணிக்கு இன்றைய போட்டியின் வெற்றி முக்கியமல்ல என்றாலும் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஹைதராபாத் அணி அபார பந்து வீச்சின் மூலம் 5 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றிருந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 146 ஓட்டங்களைபெற்றிருந்த நிலையில், பெங்களூர் அணியால் 141 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

இதனால் இன்றைய தினம் ஹைராபாத் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள கூடிய திட்டத்துடன் பெங்களூர் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால் 20 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும்.

புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலுள்ள பெங்களூர் அணி அதிக ஓட்டங்கள் அல்லது விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளதுடன், சாதாரன வெற்றியை பெற்றுக்கொண்டால் 5வது இடத்துக்கு முன்னேற முடியும்.

எவ்வாறாயினும் பெங்களூர் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை முற்றுமுழுதாக தக்கவைக்க முடியும். அடுத்து நடைபெறவுள்ள ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றிபெற்றாலும் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடவுள்ள போட்டிகளின் முடிவெ பெங்களூர் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும்.

இதேவேளை இன்றைய போட்டியில் அணிகளில் எவ்வித மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை என்பதுடன், ஹைராபாத் அணியின் சார்பில் உபாதைக்குள்ளாகியுள்ள விரிதிமன் சஹா மீண்டும் இணைக்கப்படாலம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

<<Tamil News Group websites>>

royal challengers bangalore vs sunrisers hyderabad 2018 news Tamil