மே 18 நினைவேந்தல் நிகழ்வில் எந்த பிரச்சினையும் இல்லை – ராஜித்த பதிலளிக்கிறார்

0
582
TAMIL NEWS mathala airport india magampura harbour china

(Rajitha responds NPC declaring May 18 day mourning)

வட மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே 18 நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவதில் எந்தபிரச்சினையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை வௌியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வடக்கு மக்கள் யுத்தத்தில் தாம் இழந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை நினைவு கூறுவதற்காகவே இந்த நிகழ்வை நடத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ராணுவத்தினரால் பயங்கரவாதிகள் மாத்திரம் கொல்லப்படவில்லை, சாதாரண பொதுமக்களும் இந்த போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்தனர்.

எந்தவொரு நாட்டிலும் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படாமல் யுத்த சூழ்நிலைகள் நிறைவடையவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மே 18 நினைவேந்தல் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த மே 10 ஆம் திகதி இடம்பெற்ற 122 வது வட மாகாண சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக யோசனையொன்றை முன்வைத்தார்.

அந்த யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

(Rajitha responds NPC declaring May 18 day mourning)

More Tamil News

Tamil News Group websites :