{ Najib home midnight wrong Nurul denounced }
மலேசியா: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் நள்ளிரவில் போலீஸ் சோதனை மேற்கொள்ளப் பட்டதை பக்காத்தான் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“அதிகாலையில், தூங்கும் நேரத்தில் ஒருவரின் வீட்டை சோதனை செய்வது தவறான செயலாகும். நானும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையை கடந்து வந்துள்ளேன் என்றார் அவர்.
சோதனை செய்யுங்கள், விசாரணைக்கு உட்படுத்துங்கள். விவேகத்துடன் செயல்படுங்கள். ஆனால், இவை கொள்கை அடிப்படையில் செயல்படுத்தப் பட வேண்டும்” என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான நூருல் இஸ்ஸா அன்வார் தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒருவரை சோதனை செய்வதில் தவறில்லை. ஆனால், அவரை அவமானப் படுத்தும் வகையில் அச்சோதனை அமையக் கூடாது என்று அமானா நெகாரா கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் காலிட் சமாட் கூறியுள்ளார்.
“சோதனை செய்து விட்டால், சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்துங்கள். அவரின் வீட்டில் அதிகாலை 4 மணி வரை சோதனை நடவடிக்கை நடத்துவதன் அவசியம் என்ன? என் வீட்டிலும் அதிகாலை 2.30 மணிக்கு சோதனை நடத்தப்பட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags: Najib home midnight wrong Nurul denounced
<< RELATED MALAYSIA NEWS>>
* MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்
*ஜூன் 1 முதல் SST நடைமுறைக்கு வருகின்றது..!
*இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!
*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!
*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்
*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..
*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!
*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!
*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!
<<Tamil News Groups Websites>>