{ Najeeb house handbag clothes recovery }
மலேசியா: நேற்று இரவு மணி 10.15 மனிக்கு தொடங்கி அதிகாலை வரையில், ஜாலான் டுத்தாவில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் வீடுகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளின் போது கைப் பைகள் மற்றும் சில பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பரிசுப் பொருள்கள் என நம்பப்படும் பல பொருள்களைப் போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த சோதனையில் பைகள் உட்பட சில தனிப்பட்ட உடமைகளைத் தவிர வீட்டிலிருந்து வேறு எந்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என நஜீப்பின் வழக்கறிஞர் டத்தோ ஹர்ப்பால் சிங் இன்று அதிகாலை 4 மணி அளவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நடைபெற்ற திடீர் பரிசோதனைக்கு நஜீப்பின் குடும்பம் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், வீட்டிலுள்ள அனைத்து அறைகளிலும் பரிசோதனை நடத்தப்பட்டதால் சிறிது தாமதமானதாகவும் கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சொந்தமான இதர ஐந்து இடங்களிலும் பரிசோதனை நடத்தப்பட்டது என புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவை தாமான் டூத்தா,ஸ்ரீ பெர்டானா, கோலாலம்பூர் பெவிலியனில் உள்ள இரண்டு இடங்கள் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை என நம்பப்படுகின்றது.
Tags: Najeeb house handbag clothes recovery
<< RELATED MALAYSIA NEWS>>
*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!
*428 கோடி நில ஊழல்: தெங்கு அட்னான் மீது விசாரணை செய்யுமாறு கோரிக்கை..?
*சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி
*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!
*ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!
*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!
*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!
*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!
*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!
*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!
<<Tamil News Groups Websites>>