(mumbai indian beat Kings xi punjab today news Tamil)
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் முப்பை அணிகளுக்கிடையிலான முக்கியமான லீக் போட்டியில் மும்பை அணி திரில் வெற்றிபெற்று பிளே-ஆஃப் சுற்றை தக்கவைத்துக்கொண்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி கட்டயா வெற்றியினை நோக்கி களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஒரு கட்டத்தில் 71 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து தடுமாறிய மும்பை அணியின் ஓட்ட எண்ணிக்கையை பொல்லார்ட் மற்றும் குர்னால் பாண்டியா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஓட்டங்களை குவித்தனர்.
பொல்லார்ட் 23 பந்துகளுக்கு 50 ஓட்டங்களையும், குர்னால் பாண்டியா 23 பந்துகளுக்கு 33 ஓட்டங்களையும் குவித்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை குவித்தது.
பந்து வீச்சில் என்ரு டை 16 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
மறுமுனையில் சவாலான இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் பின்ச் அவருக்கு உதவியாக ஆடினார்.
எனினும் ஏனைய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவற, பஞ்சாப் அணி 5 விக்கட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 3 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அதிரடியாக ஆடிய கே.எல்.ராஹுல் 60 பந்துகளுக்கு 94 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் 35 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
அபாரமாக பந்து வீசிய பும்ரா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியுடன் மும்பை அணி 12 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் அடுத்து வரும் டெல்லி அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டும்.
இதேவேளை பஞ்சாப் அணி தகுதிபெறவேண்டுமானால் சென்னை அணிக்கெதிரான போட்டியை சிறந்த ஓட்ட விகிதத்தில் வெற்றிபெறவேண்டும்.
- மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் சாய்த்தது ராஜஸ்தான்
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
- விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>
mumbai indian beat Kings xi punjab today news Tamil, mumbai indian beat Kings xi punjab today news Tamil