மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

0
708
Mahathir health care, malaysia tami news, malaysia, malaysia news, Mahathir,

{ Mahathir health care }

மலேசியா : நாட்டின் 7ஆவது பிரதமராக பதவியேற்றிருக்கும் துன் மாகாதீரின் உடல்நலம் குறித்து அவரது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா பெரிதும் கவலை தெரிவித்துள்ளார்.

அவருக்குப் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது குறித்து தாம் கவலை அடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தூங்கப்போகும் நேரத்தில் கூட அரசாங்க ஆவணங்களைப் புரட்டிக் கொண்டிருக்கின்றார்.

ஒருநாள் இரவில் மட்டும் காலை 4 மணி வரைக்கும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட ஆவணங்களைப் பார்த்துள்ளார். ஆனால், அதன் பின்னர் காலை 7 மணிக்கெல்லாம் அவர் மீண்டும் அலுவலகத்தில் இருந்தார் என்று முகநூலில் சித்தி ஹஸ்மா பதிவு செய்துள்ளார்.

92 வயதை எட்டி விட்ட மகாதீர், மிகக் கடுமையாக உழைத்து வருகின்றார் என்று பல மலேசியர்கள் கருத்துரைத்து வரும் அதேவேளையில், அவரது உடல் நலம் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய நலம் குறித்து எனக்குக் கவலையாகத்தான் இருக்கின்றது.

இது ரம்லான் மாதமாக இருப்பதால் முஸ்லிம்கள் அவருடைய நலனுக்காக பிரார்த்திப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்’ என்று சித்தி ஹஸ்மா கூறியுள்ளார்.

Tags: Mahathir health care

<< RELATED MALAYSIA NEWS>>

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

*428 கோடி நில ஊழல்: தெங்கு அட்னான் மீது விசாரணை செய்யுமாறு கோரிக்கை..?

*சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி

*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!

*ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!

*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

<<Tamil News Groups Websites>>