சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

0
767
Late Actress Soundarya life movie,Late Actress Soundarya life,Late Actress Soundarya,Late Actress,Late

(Late Actress Soundarya life movie)

தமிழ், தெலுங்கு பட உலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது.

பெங்களூரைச் சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார்.

1993-ல் கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கமல்ஹாசனுடன் காதலா காதலா படத்திலும், விஜயகாந்துடன் தவசி, சொக்கத்தங்கம் படங்களிலும் நடித்தார். தெலுங்கு, கன்னட பட உலகிலும் உச்சத்தில் இருந்தார். தெலுங்கு பட உலகினர் இவரை அடுத்த சாவித்திரி என்றே அழைத்தனர்.

2004-ல் பெங்களூர் அருகே தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது விமான விபத்தில் பலியானார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் கடைசியாக பி.வாசு இயக்கிய ஆப்தமித்ரா கன்னட படத்தில் நடித்து இருந்தார். இந்த படம்தான் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி என்ற பெயரில் வந்து வசூல் அள்ளியது.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கில் படமாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் சௌந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாக பிரபல தயாரிப்பாளர் ராஜ்கந்துகுரி அறிவித்து உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இது உருவாகிறது.

சௌந்தர்யா வேடத்துக்கு நடிகை தேர்வு நடக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா,என்.டி.ராமராவ் ஆகியோரின் வாழ்க்கையும் சினிமா படமாகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

சூர்யாவுடன் டூயட் பாட தயாராகும் சாயிஷா சய்கல்..!

கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

பிரபாஸுக்கு நான் வில்லன் இல்லை : அருண் விஜய் பரபரப்புத் தகவல்..!

மீண்டும் ஆபாசத்திற்கு மாறிய சன்னிலியோன் : கவர்ச்சிக் கடலாக அள்ளி எறியும் புகைப்படம் வைரல்..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

இடையசைவால் இளைஞர்களை மீண்டும் கிறங்கடித்த சிம்ரன்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-Late Actress Soundarya life movie

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

தமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி