பிரான்ஸில் பர்தா அணிவது குற்றமா?

0
292
lady wear Abaya lead sentence 6 months

இன்று (மே 17), பர்தாவை அகற்ற மறுத்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை வழங்கி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. lady wear Abaya lead sentence 6 months 
காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் 34 வயதுடைய இஸ்லாமிய பெண்ணை கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்தனர். விசாரணைகளுக்காக அவர் அணிந்திருந்த பர்தாவினை அகற்றச்சொல்லி காவல்துறையினர் பணித்தனர்.

ஆனால் குறித்த அப்பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு மதம் காரணமாக காவல்துறையினரின் விசாரணைகளுக்கு இடையூறாக பர்தா அணிந்திருந்தது சட்டப்படி குற்றம் என்பதால் அவ் வழக்கு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

விசாரணைகளை முடித்துக்கொண்டு, இன்று மே 17 ஆம் திகதி தீர்ப்பளித்த Toulouse நகர குற்றவியல் நீதிமன்றம், குறித்த அப்பெண்ணுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இத் தீர்ப்பை எதிர்த்து, குறித்த பெண் தற்போது மேல் முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**