இந்த மாணவியின் படம் உலகையே அதிரவைத்துள்ளது!

0
786
Kent University Student Graduation Photo

கென்ட் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியொருவர் தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்தமையை கொண்டாடிய விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டமளிப்பை அடுத்து பாரிய துப்பாக்கியொன்றுடன் அவர் பல்கலைக்கழகத்தை வலம் வந்துள்ளார்.

இதனை படமெடுத்து இணையத்திலும் பதிவேற்றியுள்ளார்.

கைட்லின் பென்னட், என்ற 22 வயதான குறித்த மாணவி,தனது நடவடிக்கை மூலம் ஒரு செய்தியை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பல்கலைக்கழகத்தில் 1970 இல் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டமொன்றின் போது 4 பேர், படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பை காட்டும் முகமாக அவர் இந்நடவடிக்கையில் இறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் துப்பாக்கிச் சட்டம் தொடர்பான சில திருத்தங்கள் தொடர்பிலும் எதிர்ப்பை வெளியிடும் முகமாகவே அவர் இவ்வாறு நடந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.