அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறினார் முகுருஷா

0
568
italian open 2018 Garbine Muguruza

(italian open 2018 Garbine Muguruza)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் முன்னணி வீராங்கனை கார்பின் முகுருஷா அதிர்சிச் தோல்வியடைந்துள்ளார்.

இன்று அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் முகுருஷா, அவுஸ்திரேலிய வீராங்கனை டரியா கவ்ரிலோவாவை எதிர்கொண்டு விளையாடினார்.
மிகவும் சுவாரஷ்யமாக இடம்பெற்ற இந்த போட்டியில் முகுருஷா 1-2 என போராடி தோற்றார்.

போட்டியில் ஆரம்ப செட்டை 7-5 என முகுருஷா கைப்பற்றி, பதிலடி கொடுத்த டரியா கவ்ரிலோவா இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றினார்.

இந்நிலையில் போட்டி 1-1 என சமனிலையாக வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்று இடம்பெற்றது.

விறுவிறுப்பாக இடம்பெற்ற மூன்றாவது செட்டில் இரு வீராங்கனைகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதன் இறுதியில் டரியா கவ்ரிலோவா டை பிரேக்கர் ஊடாக மூன்றாவது செட்டை 7-6 (8-6) என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>