இத்தாலி ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் சிவிடோலினா!

0
592
italian open 2018 Elina Svitolina news Tamil

(italian open 2018 Elina Svitolina news Tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு உக்ரைன் வீராங்கனை எலீனா சிவிடோலினா தகுதிபெற்றுள்ளார்.

ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் சற்றுமுன்னர் நடைபெற்ற மூன்றாவது சுற்றில் சிவிடோலினா, ரஷ்யாவின் டரியா கசட்கினாவை எதிர்கொண்டார்.

போட்டியின் முதல் செட்டில் சிறப்பாக ஆடிய கசட்கினா, சிவிடோலினாவை தினறடித்தார். முதல் செட்டை 6-0 என கைப்பற்றிய இவர் இரண்டாவது செட்டில் தடுமாற தொடங்கினார்.

வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சிவிடோலினா அடுத்த இரண்டு செட்களையும் 6-3 மற்றும் 6-2 என இலகுவாக கைப்பற்றிறனார்.

இத்தாலி ஓபன் காலிறுதிக்கு இந்த சீசனில் முன்னேறிய முதல் வீராங்கனையாக எலீனா சிவிடோலினா பதிவாகியுள்ளார்.

<<Tamil News Group websites>>