அரச வைத்திய அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம்; நோயாளர்கள் சிரமம்

0
763
Government Medical Officers strike Patients difficulty

(Government Medical Officers strike Patients difficulty)
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், மலையகத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால், இங்கு சிகிச்சைக்காக சென்ற பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களில் இருந்து சென்ற தோட்ட தொழிலாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்தமையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

எனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Government Medical Officers strike Patients difficulty