​ஆம்புலன்ஸாக மாறிய அரசுப் பேருந்து!

0
224
Government bus became ambulance

Government bus became ambulance

அரசுப்பேருந்து ஒன்றில் திடீரென வலியால் துடித்த கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக சினிமா பாணியில் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலம் பணிமனையில் திருவனந்தபுரத்திற்கு பேருந்தை ஓட்டுநர் கிரிஷ் வழக்கம் போலவே அன்று காலை ஓட்டிச்சென்றார், அவருடன் நடத்துனர் சஜன் கே.ஜான் இருந்தார்,

காலை 8:30 மணியளவில் அயூர் பேருந்து நிலையத்திற்கு வந்த அப்பேருந்தில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவரும் அவருடன் அவரது கணவர் மற்றும் மகனுடன் ஏறியுள்ளார்,

இதனையடுத்து கான்யகுளங்கரா பகுதியை பேருந்து வந்தடைந்தபோது, அதில் இருந்த கர்ப்பிணி பெண் வழியால் துடித்ததை கண்ட நடத்துனர் சஜன் பேருந்தில் பின்புறம் நின்றுக்கொண்டிருந்த அவரது கணவரிடம் கூறியுள்ளார்,

இருப்பினும் நிலைமை மோசமாவதை உணர்ந்த ஓட்டுநர் எதைப்பற்றியும் யோசிக்காமல், வேறு வாகனத்திற்காகவும் காத்திருக்காமல், அருகில் மருத்துவமனைகள் இல்லாததால் உடனே பேருந்தை 20கிமீ தூரத்திலுள்ள திருவனந்தபுரத்திற்கு ஓட்டிச்சென்றார், அப்போது பேருந்தில் சுமார் 70’வது பயணிகள் இருந்துள்ளனர்,

இதர பயணிகளும் அப்பெண்ணின் நிலைமையை உணர்ந்து அப்பெண்ணிற்காக தங்களது நிறுத்தங்களில் நிறுத்துமாறு எனக்கூறாமல் பேருந்துக்கு வழிவிடக்கோரி எதிரே வந்த வாகனங்களை ஜன்னல்களில் வழியாக சைய்கையில் எச்சரித்தவாறே இருந்தனர்,

அப்போது பேருந்தில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நிலைமையை கூறி திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சரிசெய்து தருமாறு கேட்ட பின் அவர்களும் ஒத்துழைப்பு தந்து அந்த சாலையில் நெரிசல் இல்லாமல் ஏற்பாடுகள் செய்து தந்துள்ளார்கள்,

பிறகு அனைவரின் ஒத்துழைப்போடு அரசுப்பேருந்தே ஆம்புலன்ஸாக மாறி அந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

More Tamil News

Tamil News Group websites :