யாழில் 275 கிலோ கிராம் கஞ்சா தீயிட்டு அழிப்பு

0
935
Destruction 275 kg cannabis Jaffna

(Destruction 275 kg cannabis Jaffna)
யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் 275 கிலோ கிராம் கஞ்சா உட்பட சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

2016 ஆண்டு நிறைவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வன்புணர்வு உள்ளிட்ட 15 வழக்குகளின் சான்றுப் பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் உத்தரவில், நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் போட்டு அவை எரிக்கப்பட்டுள்ளன.

இந்த சான்றுப் பொருட்களில் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 27 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருட்களும் உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை, சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையுள்ள அரச காணியில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் உத்தரவில் அவர் முன்னிலையில் அழிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Destruction 275 kg cannabis Jaffna