Child death due improper treatment Blow hospital glasses
பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த பைசல் அகமது பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார், இவரது மனைவி ரவியத் பிரசவத்திற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி மஹாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார், இந்நிலையில் இன்று அதிகாலை ரவியத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே பெண் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொண்டுள்ளார்,
அப்போது மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால்தான் குழந்தை இறந்துவிட்டதாகவும், இறந்த தகவலை கூட எங்களிடம் உடனே தெரிவிக்கவில்லை, பிறகு வெகுநேரம் கழித்து மருத்துவர் அல்லாத வேறொரு ஊழியர் வந்து குழந்தை இறந்துவிட்டதாக கூறினார் என்று ரவியத்தின் உறவினர்கள் கூறினார்கள்,
அப்போது தவறான சிகிச்சை அளித்த அந்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மருத்துவமனை முன்பு அமளியில் ஈடுபட்டனர், அச்சமயம் மருத்துவமனை கண்ணாடி அடித்து உடைத்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது…..
More Tamil News
- மாணவ-மாணவிகள் வரைந்த சுவர் ஓவியங்கள் : வியந்துபோன மக்கள்!
- நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!
- சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
- பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!
- இயக்குனராக உருவெடுக்கின்றார் நடிகர் அரவிந்த்சாமி!
- காங்கிரஸ்சில் ’12’ எம்எல்ஏக்கள் மாயம்!
- +2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ – மாணவிகளின் தேர்ச்சி விகிதம்!
- கூண்டுக்குள் அடைந்திருந்தபடி மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு!
- கள்ள காதலுக்கு தொந்தரவு கொடுத்த கணவன் கொலை : மனைவி கை
- சென்னையில் குளிர்சாதன பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை பலி!
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com